வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் மஹிந்த அணி

வேட்பு மனு நிராகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடும் மஹிந்த அணி

தங்களது கட்சியின் வேட்பு மனுக்கள் சில இடங்களில் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் பொது ஜன பெரமுண கட்சியானது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவுத் தளத்தில் செயற்படும் பொதுஜன பெரமுண கட்சியின் வேட்பாளர் பட்டியல் பாணந்துறை பிரதேச சபை, மஹரகம நகர உள்ளிட்ட சில இடங்களில் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மஹரகம நகர சபைக்கான வேட்பு மனுவில் போதுமான பெண்கள் பிரதிநிதித்துவம் இல்லை என்ற காரணத்தினால் அக்கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது.

குறித்த இடங்களில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக பொதுஜன பெரமுண கட்சி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

இன்றைய தினம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.