விலைக்கு விற்கப்பட்ட பச்சை குழந்தை பொலிஸாரால் மீட்பு

விலைக்கு விற்கப்பட்ட பச்சை குழந்தை பொலிஸாரால் மீட்பு

பிறந்து சில நாள்­களே ஆன பச்­சி­ளம் குழந்தை ஒரு லட்­சம் ரூபாய் பணத்­துக்­காக விற்­பனை செயப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட் டப்­ப­டுகின்­றது. வவு­னி­யா­வைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரால் பெற்­றெ­டுக்­கப்­பட்ட இந்­தக் குழந்தை யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்த ஒரு­வ­ருக்கு விற்­கப்­பட்­டது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இந்­தச் சம்­ப­வம் கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. குழந்தை ஆயி­ரம் ரூபா­வுக்கு விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. குழந்­தையை வாங்­கி­ய­வர் பின்­னர் அதை ஒரு லட்­சம் ரூபா­வுக்கு வேறொ­ரு­வ­ருக்கு விற்­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

இது தொடர்­பில் மேற்­கொள்­ளப்­பட்ட விசா­ர­ணை­களை அடுத்து குழந்­தை­யின் தாயும், குழந்­தையை விற்­பனை செய்­வ­தற்கு இடைத்­த­ர­க­ரா­கச் செயற்­பட்ட வவுனியா­வைச் சேர்ந்த பெண்­ணும் பொலி­ஸா­ரி­டம் நேற்­று­முன்­தி­னம்                   சிக்­கி­யுள்­ளனர். குழந்­தை­யும் மீட்­கப்­பட்­டது.

சம்­ப­வத்தை உறு­திப்­ப­டுத்­திய வவு­னி்­யாப் பொலி­ஸார் தாம் எவ­ரை­யும் கைது செய்­ய­வில்லை யாழ்ப்­பா­ணப் பொலி­ஸாரே இது தொடர்­பான விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர் என்­ற­னர். யாழ்ப்­பா­ணப் பொலி­ஸா­ரும் சம்­ப­வத்தை             உறுப்­ப­டுத்தி­னர். எனி­னும் தாம் எவ­ரை­யும் கைது செய்­ய­வில்லை என்­ற­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *