வவுனியாவில் காணாமற்போன உறவுகள் 334ஆவது நாளாக போராட்டம்

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் 334ஆவது நாளாக போராட்டம்

 

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இன்று (23) 334ஆவது நாளாகும் இதையடுத்து வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் கடந்த 2017.01.23 ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்று ஒரு வருடமானதை முன்னிட்டு இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

தமது போராட்டத்திற்கு ஸ்ரீலங்கா அரசானது தீர்வினைப் பெற்றுத்தராது என்றும் தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாகவும்  சர்வதேசத்திடம் தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்த காணாமற்போன உறவுகள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று காலை 11.30மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் போராட்ட களத்திற்குச் சென்ற உறவுகள் அங்கிருந்து தமது கவனயீர்ப்பினை மேற்கொண்டனர். பெருமளவான உறவுகள் இன்றைய போராட்டத்தில் கலந்துகொண்டனர்.