வழமைக்கு மாறாக கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு! பொலிஸார் குவிப்பு

வழமைக்கு மாறாக கிளிநொச்சியில் பலத்த பாதுகாப்பு! பொலிஸார் குவிப்பு

கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தில் வழமைக்கு மாறாக இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் இன்றாகும். இந்த நிலையில் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளனர்.

இதன் காரணமாகவே கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மாவட்டச் செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிற ஏனைய வாகனங்கள் உட்பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அதிகளவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக தேவைகள் ஏற்படும் பட்சத்தில் இன்னும் அதிகமான பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

புகைப்படங்கள் – சுமன்