வடக்கின் போர் மும்முரம், இரு அணிகளும் சம பலம்

வடக்கின் போர் மும்முரம், இரு அணிகளும் சம பலம்

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரிக்­கும் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான வடக்­கின் போர் துடுப்­பாட்­டத்­தில் இரண்டு அணி­க­ளும் சம         பலத்­து­டன் உள்­ளன.

நாணயச் சுழற்­சி­யில் வெற்­றி­ பெற்ற யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி, முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.

சென். ஜோன்­ஸின் ஆரம்ப வீரர்­க­ளாக சௌமி­யன் மற்­றும் செரோ­பன். 22             ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் சௌமி­யன். ஐந்து ஓட்­டங்­க­ளு­டன் ஆட்டமிழந்­தார் அபி­னேஸ். செரோ­பன் தொடர்ந்­தும் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­திக்      கொண்­டி­ருந்­தார். டெனு­சன் மற்­றும் செரோ­பன் இணைந்து சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னர்.

அரைச் சதம் கடந்து 65 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார் செரோ­பன். அணித்      தலை­வர் ஜது­சன் வெறும் ஓர் ஓட்­டத்­து­டன் ஏமாற்­றி­னார். சென். ஜோன்­ஸின்      பின்­வ­ரிசை பெரி­ய­ள­வில் சாதிக்­க­வில்லை. 217 ஓட்­டங்­க­ளில் சென். ஜோன்­ஸின் முதல் இன்­னிங்ஸ் முடி­வுக்கு வந்­தது.

பந்­து­வீச்­சில் விஜஸ்­காந் 4 இலக்­கு­க­ளை­யும், தசோ­பன் 3 இலக்­கு­க­ளை­யும், சுஜன், மது­சன், துசாந்­தன் மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *