யாழ். நகர மையத்தில் புளொட் உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு

யாழ். நகர மையத்தில் புளொட் உறுப்பினர் வீட்டில் துப்பாக்கிகள், வாள்கள் மீட்பு

 

jaffna-plote-weapons (1)யாழ்ப்பாண நகரின் மையப் பகுதியில் புளொட் மூத்த உறுப்பினர் ஒருவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து, துப்பாக்கிகள், ரவைகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள்  கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ். போதனா மருத்துவமனை வீதியில் புளொட் உறுப்பினர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் அந்த அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் தற்போது அடாத்தாக தங்கியிருந்தார்.

வெளிநாட்டில் உள்ள அந்த வீட்டின் உரிமையாளர், வீட்டை மீட்டுத் தருமாறு யாழ். நீதிமன்றத்தின் ஊடாக முறையிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவின் பேரின், அந்த வீட்டில் இருந்தவரை சிறிலங்கா காவல்துறையினர் இன்று வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

அங்கிருந்த பொருட்களை அகற்றிய போது, அலமாரி ஒன்றுக்குள் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

jaffna-plote-weapons (1)

jaffna-plote-weapons (2)ரி-56 ரக துப்பாக்கி – 01, மகசின்கள் – 06, ரவைகள் – 396, கைத்துப்பாக்கி – 01, மகசின்கள் – 03, கோல்சர் – 02, தொலைத்தொடர்பு சாதனங்கள் – 02, வாள்கள் – 02 என்பன  இங்கிருந்து மீட்கப்பட்டன.

இதையடுத்து, புளொட் மூத்த உறுப்பினரான, மானிப்பாயைச் சேர்ந்த சிவகுமார் (வயது 55)  கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.