யாழில் 80 இலட்சம் ரூபாய் பணம் திரைப்பட பாணியில் கொள்ளை

யாழில் 80 இலட்சம் ரூபாய் பணம் திரைப்பட பாணியில் கொள்ளை

அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்கு எடுத்து வரப்­பட்ட 80 இலட்­சம் ரூபா பணம் திரைப்­ப­டப் பாணி­யில் திரு­டப்­பட்­டது. அரச வங்கி ஒன்­றுக்­காக                வாக­னத்­தில் இர­க­சி­ய­மாக எடுத்து வரப்­பட்­ட­போதே பணம் காணா­மற்­போ­யுள்­ளது.

திருட்­டுத் தொடர்­பான சந்­தே­கத்­தில் பணத்தை எடுத்து வந்த வங்கி ஊழி­யர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குக் காவ­லுக்­குச் சென்ற ஒரு­வ­ரு­மாக நால்­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். பய­ணத்­தின் இடை­யில் தேநீர் குடிப்­ப­தற்­கா­கக் கடை   ஒன்­றுக்­குள் சென்று திரும்­பு­வ­தற்­கி­டை­யில் பணம் காணா­மற்­போ­யி­ருந்­தது என்று இந்த நால்­வ­ரும் தமது வங்கி அதி­கா­ரி­க­ளி­டம் முறை­யிட்­டி­ருந்­த­னர். இது குறித்த விசா­ர­ணை­க­ளைக் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வுப் பொலி­ஸார் ஆரம்­பித்­துள்­ள­னர்.

வங்கி ஊழி­யர்­கள் மற்­றும் பாது­கா­வ­லரே பணத்­தைத் திரு­டி­விட்டு                        நாட­க­மா­டு­கி­றார்­கள் என்­கிற சந்­தே­கத்­தின் பேரி­லேயே பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்டனர். எனி­னும் அவர்­க­ளி­டம் இருந்து இது­வ­ரை­யில் பணம்                    மீட்­கப்­ப­ட­வில்லை. விசா­ர­ணை­கள் தொடர்­கின்­றன.

வங்­கித் தேவைக்கு அவ்­வப்­போது இப்­படி வாக­னத்­தில் பணம் எடுத்து வரப்­ப­டு­வது வழமை. அது­போன்றே அன்­றும் அநு­ரா­த­பு­ரத்­தில் இருந்து 80 லட்­சம் ரூபா         பணத்­து­டன் வாக­னம் யாழ்ப்­பா­ணம் நோக்­கிப் புறப்­பட்­டது. வாக­னத்­தில் வங்­கிப் பணி­யா­ளர்­கள் மூவ­ரும் அவர்­க­ளுக்­குப் பாது­காப்­பாக ஆயு­தம் தாங்­கிய காவ­லர் ஒரு­வ­ரும் இருந்­த­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *