யாழில் தப்பிப்பிழைத்த தமிழ் கட்சிகள்

 

யாழில் தப்பிப்பிழைத்த தமிழ் கட்சிகள்

sumaயாழ்.மாநகரசபையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் வேட்புமனு தப்பிப்பிழைத்துள்ளது.வேட்பாளர் ஒருவரே சமாதான நீதிவானாக வேட்புமனுவை உறுதிப்படுத்தியதையடுத்து கடைசி நிமிடம் வரை வேட்புமனு கேள்விக்குள்ளாகியிருந்தது.இறுதியில் 13வேட்பாளர்கள் நீக்கப்பட்டு வேட்பு மனு ஏற்று;க்கொள்ளப்பட்டுள்ளது.மஹிந்தவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் ஜந்து வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
எனினும் பிரதான தமிழ் கட்சிகள் எவற்றினதும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கவில்லை.எனினும் வேட்பாளர்கள் சிலரது பெயர்கள் நிராகரிக்கப்பட்டிருந்தது.
16 உள்ளுராட்சி சபைகளிற்கு 127 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்தனர்.அதில் இருவர் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கவில்லை.

Untitledகிளிநொச்சியில் ஒன்பது அரசியல் கட்சிகளும், ஒரு சுயேட்சை குழுவும் போட்டியிட்டிருந்த நிலையில் ஒன்று நிராகரிக்கப்பட்டிருந்தது.
மாவட்டத்தில் உள்ள 40 வட்டாரங்களில் ஒன்பது அரசியல் கட்சிகளையும், ஒரு சுயேட்சை குழுவையும் 341 வேட்பாளர்களும், 297 நியமன பிரதிநிதிகளும் தேர்தல் களத்தில் உள்ளனர்.

ஜக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திர கட்சி, தமிழரசுக் கட்சி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் சுயேட்சை குழு, ஜேவிபி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, சிறிலங்கா பொதுஜன பெரமுன எனபனவே கிளிநொச்சியில் போட்டியிடுகின்றன.

இன்னிலையில் அன்னலட்சுமி வனசுரா தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.