மோசமான முடிவுகளை எடுத்த கோத்தபாய?

மோசமான முடிவுகளை எடுத்த கோத்தபாய?

பாதுகாப்பு தலைமையகங்களை மாற்றும் முடிவினை கடந்த அரசாங்கம் எடுத்ததன் விளைவாக பல மில்லியன் ரூபா இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம் பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தகவல்களை வெளியிட்டிருந்தார் என அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தின் போது பாதுகாப்பு அமைச்சும், பாதுகாப்பு சம்பந்தமான முடிவுகள் பலவும் திடீரென எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு நிதி நெருக்கடிகளைச் சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சில முடிவுகளை திடீரென்றே எடுத்துள்ளார். குறிப்பாக, பாதுகாப்புத் தலைமையகங்களை அகற்றுவது தொடர்பாக பொருத்தமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

பொருத்தமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால் பாதுகாப்புத் தலைமையகங்களினால் 15 கட்டடங்களை பெருமளவு பணத்துக்கு தற்காலிகமாக வாடகைக்கு பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

இந்நிலையில், பாதுகாப்புத் தலைமையகங்களை கொழும்பில் இருந்து அகற்றும் முடிவு விசாரிக்கப்பட வேண்டியதொரு விடயம் என்று தற்பொழுது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

காலிமுகத்திடலில் சங்ரிலா நிறுவனத்துக்கு விற்கப்பட்ட காணியின் மூலம் பெறப்பட்ட 125 மில்லியன் டொலர் நிதி, பத்தரமுல்லவில் பென்டகன் பாணியிலான பாதுகாப்புத் தலைமையக வளாகத்தை அமைப்பதற்காக மத்திய வங்கியில் சிறப்புக் கணக்கில் வைப்பிலிடப்பட்டது.

ஆனால், அந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்படவில்லை. முன்னைய அரசாங்கத்தினால் அது விற்கப்பட்டது.

இதேவேளை, பாதுகாப்புத் தலைமையகங்களை அகற்றும் முடிவு ஏன் திடீரென எடுக்கப்பட்டது என்பது குறித்து தெரியவில்லை. எனினும் இது விசாரிக்கப்பட வேண்டிய முக்கியமான விடையமாக மாறியிருக்கிறது. அவர்கள் எடுத்த இந்த முடிவு மிக மிக மோசமானதொன்று.

நாட்டின் தலைநகரமான கொழும்பு நகருக்குப் பாதுகாப்பு வழங்க பாதுகாப்புத் தலைமையகங்கள் அவசியமானது தான். ஆனால் பாதுகாப்பு தலைமையகங்களை கொழும்பில் இருந்து அகற்ற ஏன் திடீர் முடிவு எடுக்கப்பட்டது? என்பதற்கான விடை இதுவரை கிட்டவில்லை.

பாதுகாப்புத் தலைமையகங்களினால் 15 கட்டடங்களை பெருமளவு பணத்துக்கு தற்காலிகமாக வாடகைக்கு பெற்றிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எனவே என்ன தேவை இருந்தது என்பது குறித்து கேள்வி எழுப்பட்டுள்ளது.

இந்த முடிவினால் ஏற்பட்டுள்ள இழப்புகளை கருத்தில் கொண்டு, அப்பொழுது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்றது.

பொதுமக்களுக்கு பெரும் நிதி இழப்புக்களை ஏற்படுத்தும் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் எடுக்கப்பட்ட இதுபோன்ற முடிவுகள் குறித்து விசாரிக்க ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு பல அமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.