மைத்திரியின் அதிரடியால் கடும் அதிருப்தியில் அமைச்சர்கள்

அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்காது சில அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் நேற்று கொண்டு வரப்பட்டன.

மீன்பிடித்துறை, நீதி, நகர அபிவிருத்தி, சட்டம் ஒழுங்குத்துறை, அஞ்சல்துறை ஆகியவற்றின் செயலாளர்களே மாற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த அமைச்சர்கள் இந்த விடயத்தில் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்களும் அடங்குகின்றனர். எனினும் செயலாளர்கள் மாற்றப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் தெரியவரவில்லை.