முல்லைத்தீவு மீனவர்கள் கடலில் மாயம்

முல்லைத்தீவு மீனவர்கள் கடலில் மாயம்

முல்லைத்தீவு, நாயாறு பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற  மீனவர்கள் மூவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போயுள்ளவர்கள் சிலாபம், பங்கதெனிய பிரதேசங்களை சேர்ந்த 50, 48 மற்றும் 24 வயதானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்பகுதியில் கடும் காற்று வீசுவதாகவும் இதனால் மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில் முல்லைத்தீவு கடற்பகுதியில் இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் கரையோரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தற்பொழுது காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் உதவியுடன் காணாமல் போயுள்ள மீனவர்களை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *