மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனுக்கு தீக்காயம்

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவனுக்கு தீக்காயம்

தவ­றான முடி­வெ­டுத்து தீயிட்டு உயிரை மாய்க்க முயற்­சித்த மனை­வியை         காப்­பாற்­றச் சென்ற கண­வ­னும் தீக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­னார்.இந்­தச் சம்பவம் முல்­லைத்­தீ­வில் நேற்­று­முன்­தி­னம் இரவு இடம்­பெற்­றுள்­ளது.
சம்­ப­வம் தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சங்­கி­லி­யன் வீதி, உடை­யார் கட்டு தெற்கு                 மூங்­கி­லாற்­றுப்­ப­கு­தி­யில் வசிக்­கும் குடும்­பம் ஒன்­றில் கண­வன் மனை­விக்கு இடை­யில் சம்­ப­வம் நடந்த அன்­றைய தினம் வாக்­கு­வா­தம் ஏற்­பட்­டது. கண­வன்  நித்­தி­ரை­யாக இருந்த சமை­யம் மனைவி உட­லுக்கு மண்­ணெண்­ணை­யினை ஊற்றி உயிரை மாய்க்க முயன்­றுள்­ளார்.கண­வன் நித்­திரை முழித்­துத்              பார்த்­த­போது மனைவி தீயில் எரி­வது தெரி­ய­வந்­தது.

தீயை அணைக்க முற்­பட்டபோது கண­வ­னின் கையி­லும் தீக்­கா­யம் ஏற்­பட்­டது.  அய­ல­வர்­க­ளின் உத­வி­யு­டன் இரு­வ­ரும் மீட்­கப்­பட்டு புதுக்­கு­டி­ யி­ருப்பு ஆதா­ர­            ம­ருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

மேல­திக சிசிச்­சைக்­காக மாவட்ட மருத்­து­வ­ம­னை­யின் அவ­ச­ர­சி­கிச்சை பிரி­வில் குறித்த பெண் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.சம்­ப­வம் குறித்து புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *