புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?

புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்பு?

யாழில் புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் இருந்து பாரிய ஆயுதங்களுடன் கைதான புளொட்டின் முன்னாள் உறுப்பினருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள புளொட் அமைப்பின் பழைய அலுவலகத்தில் பாரிய ஆயுதங்களுடன் புளொட்டின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரை நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் முன்னிலைப்படுத்தினார்கள்.

இதன்போதே குறித்த நபருக்கும் ஆவா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ஏ.கே 47 துப்பாக்கி ஒன்று, கைத்துப்பாக்கி ஒன்று, அவற்றுக்கு பயன்படுத்தும் மகஸின்கள் 4 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டிருந்தன.

தற்போது வடக்கில் இடம்பெறும் வாள்வெட்டு சம்பவங்களுக்கும் இவ்வாறான வாள்களே பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே இவருக்கும் வாள்வெட்டுக்குழுவுக்கும் தொடர்புகள் இருக்குமா? என்பது தொடர்பில் தாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.