பிரபலம் தேடுவதற்காக என்னைப் பயன்படுத்துகின்றனர் – வேட்பாளர்கள் மீது விக்கி குற்றச்சாட்டு

பிரபலம் தேடுவதற்காக என்னைப் பயன்படுத்துகின்றனர் – வேட்பாளர்கள் மீது விக்கி குற்றச்சாட்டு

cmஉள்ளூராட்சித் தேர்தலில் தனது பெயரைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், அது தன்னை மட்டுமே பாதிக்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர், உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.

பிரபலம் தேடுவதற்காக பல வேட்பாளர்கள் தனது பெயரைப் பயன்படுத்துவதாகவும், அதில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

“அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவர்களிடம் கூறியுள்ளேன். தேர்தல் தொடர்பாக எனக்கு எந்தக் கருத்தும் இல்லை.

ஆனால், எனது பெயரைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், அது என்னை மட்டுமே பாதிக்கும்” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.