பலத்த பொலிஸ் பாதுகாப்பில் யாழ். மாவட்ட செயலகம்!

பலத்த பொலிஸ் பாதுகாப்பில் யாழ். மாவட்ட செயலகம்!

யாழ். மாவட்ட செயலகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மாவட்ட செயகத்திற்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் தெரிவித்துள்ளார்.

 

 

 

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச சபைகளில் போட்டியிடுவதற்கு அதிகளவான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

 

 

இந்நிலையில், அதிகளவானவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வரக்கூடும். இதன் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில், அரச வாகனங்களை தவிர்ந்த ஏனைய எந்தவொரு வாகனமும் மாவட்ட செயலகத்திற்குள் பிரவசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.