நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை அமர்வுகளை கண்காணிக்கிறதாம் சிறிலங்கா தூதரகம்

நாடு கடந்த தமிழீழ அரசின் அரசவை அமர்வுகளை கண்காணிக்கிறதாம் சிறிலங்கா தூதரகம்

TGTEகனடாவில் நடந்து வரும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வுகளை கனடாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி  வெளியிட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின் 8 ஆவது கூட்டத்தொடர், கனடாவின் ரொரன்டோ நகரில், ஜனவரி 19ஆம் நாள் ஆரம்பமாகி இன்று வரை நடக்கிறது.

இந்தக் கூட்டத் தொடர் குறித்து, கனேடிய வெளிவிவகார அமைச்சிடம், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரபூர்வமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

எனினும், சிறிலங்காவின் தனிநாட்டுக் கொள்கையை ஊக்குவிக்கும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு, கனடாவில் நடந்து வரும் நிலையில், அங்குள்ள சிறிலங்கா தூதுரகம் அதனை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன” என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறியுள்ளது.