தாமதிக்கும் தந்திரத்தால் இலங்கை ஏமாற்றுகிறது!

தாமதிக்கும் தந்திரத்தால் இலங்கை ஏமாற்றுகிறது!

இலங்கை தாம­திக்­கும் தந்­தி­ரத்தைக் கடைப்­பி­டித்து பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களைத் தட்­டிக்­க­ழிக்­கின்­றது. இவ்­வாறு அமெ­ரிக்­கா­வின் முன்­னாள் போர்க்­குற்ற நிபு­ணர் ஸ் ரீபன் ராப் தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு ஆத­ரவு வழங்­கிய நாடு­கள் இலங்­கையைப் பொறுப்­புக்­கூற வைப்­ப­தில் கடு­மை­யான நிலைப்­பாட்டை எடுக்க வேண்­டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொடர் இடம்­பெற்று வரு­கின்றது. இலங்கை விவ­கா­ரம் தொடர்­பில் பக்க மாநா­டு­க­ளும் நடை­பெ­று­கின்­றன.

இலங்­கை­யில் இடம்­பெற்ற படு­கொ­லை­க­ளுக்­கான பொறுப்­புக் கூற­லி­ருந்து பன்­னாட்­டுச் சமூ­கம் எவ்­வாறு தோற்­றுப் போனது என்­னும் தொனிப் பொரு­ளில் அமைந்த பக்க நிகழ்வு 25ஆம் இலக்க அறை­யில் நேற்று இடம்­பெற்­றது. நாடு கடந்த தமி­ழீழ அரசு இந்த அமர்வை ஏற்­பாடு செய்­தி­ருந்­தது.

இந்த அமர்­வில், இலங்­கை­யின் நிலை­மாறு கால நீதிச்­செ­யற்­பா­டு­களை கண்­கா­ணிக்­கும் பன்­னாட்டு நிபு­ணர் குழு­வின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் கம்­போ­டிய கலப்பு நீதி­மன்ற சட்­ட­வா­ள­ரு­மா­கிய ரிச்­சாட் ரோஜ­ஸூம் கலந்து கொண்­டி­ருந்­தார்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *