சுவாமிநாதன் போன்றவர்களை விரட்டல் வேண்டும்

சுவாமிநாதன் போன்றவர்களை விரட்டல் வேண்டும்

தேசி­யப் பட்­டி­யல் ஊடா­கத் தெரி­வாகி அமைச்­சுப் பத­வி­களை வகிக்­கும் திலக் மாரப்­பன, மலிக் சம­ர­விக்­கி­ரம, டி.எம். சுவா­மி­ நா­தன் ஆகி­யோரை                    வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசி­யக் கட்­சியை முன்னோக்­கிக் கொண்டு செல்ல முடி­யாது. அவர்­க­ளைக் கட்­சியை விட்டு விரட்ட வேண்­டும்.

இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார் அய­லு­ற­வுத்­துறை இரா­ஜாங்க அமைச்­சர் வசந்த சேனா­நா­யக்க. சிங்­கள மொழித் தொலைக்­காட்சி அலை­வ­ரிசை ஒன்­றுக்கு     வழங்­கிய நேர்­கா­ண­லில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர்                        தெரி­வித்­த­தா­வது-,

தலை­மைத்­துவ மட்­டத்­தி­லி­ருந்து கட்­சிக்­குள் மாற்­றம் இடம்­பெற வேண்­டும் என்று ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் குழு­வொன்று வலி­யு­றுத்­து­கின்­றது. கட்­சிக்­குள் பல குழுக்­கள் இருக்­கின்­றன. மாற்­றம் ஒன்றை ஏற்­ப­டுத்­தி­னா­லேயே அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைக்க முடி­யும்.

இல்­லை­யேல் ஒவ்­வொரு குழுக்­க­ளும் வெவ்­வேறு இடத்­துக்­குத் தள்­ளப்­ப­டும் நிலை உரு­வா­கும். மாற்­றம் என்­பது விரை­வில் நடக்­க­வேண்­டும். மக்­க­ளின் எதிர்­பார்ப்­பும் அதுவே.

தலைமை அமைச்­சர் ரணில் தனது நண்­பர்­க­ளுக்­குத் தேசி­யப் பட்­டி­யலை வழங்கி, நட்­புக்­காக மிக முக்­கிய அமைச்­சு­க­ளை­யும் கைய­ளித்­துள்­ளார். முதி­ய­வர்­க­ளுக்கே முக்­கிய இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. மக்­கள் ஆணை­யைப் பெற்­ற­வர்­க­ளுக்கு வாய்ப்­ப­ளிக்­கப்­பட வேண்­டும் என்­பதே எமது கருத்து.

சுவா­மி­நா­த­னால் நாட்­டுக்கு என்ன பயன்?. திலக் மாரப்­பன, மலிக் சம­ர­விக்­கிர ஆகி­யோ­ரா­லும் என்ன பயன்?. நாட்­டுக்­காக அல்­லது கிரா­மத்­துக்­காக ஏதே­னும் நடக்­கின்­றதா?. இவர்­க­ளால் ஐந்து வாக்­கு­க­ளை­யே­னும் பெற­மு­டி­யுமா?. இவர்­களை வைத்­துக் கொண்டு பய­ணித்­தால் அழிந்­து ­வி­டு­வோம்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­லுள்ள மூத்த உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நான் கருத்து வெளி­யி­ட­வில்லை. ஜோன் அம­ர­துங்க, காமினி ஜய­விக்­கிர பெரேரா ஆகி­யோர் இருக்­கின்­ற­னர். அவர்­கள் மக்­க­ளால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­கள். அவர்­கள்          கட்­சி­யில் இருக்­க ­வேண்­டும். அவர்­களை வெளி­யேற்­றக்­கூ­டாது. கட்­சிக்­குள்         பய­ணி­க­ளாக இருப்­ப­வர்­களை விரட்­டி­ய­டிக்க வேண்­டும் – என்­றார்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *