சீன உதவியுடன் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி – வடக்கு மருத்துவமனைகள் புறக்கணிப்பு

சீன உதவியுடன் 13 மருத்துவமனைகள் அபிவிருத்தி – வடக்கு மருத்துவமனைகள் புறக்கணிப்பு

rajitha senaratneசீன அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கா அரசாங்கம் 13 மருத்துவமனைகளை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தின் 2 பில்லியன் ரூபா நிதியுதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மீரிகம தள மருத்துவமனையில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘பேருவளை, அளுத்கம, சம்மாந்துறை, ஏறாவூர், பொத்துவில், பொலன்னறுவ, பதவிய, வலஸ்முல்ல, கலவான, மகியங்கனை, ரிக்கில்லாகஸ்கட, கராப்பிட்டிய ஆகிய மருத்துவமனைகளே சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரமை் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மருத்துவமனைகளின் பட்டியலில் வடக்கு மாகாணம் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.