கிளி­நொச்­சி­யில் வர்த்­தக நிலை­யங்­கள் உடைப்பு!!

கிளி­நொச்­சி­யில் வர்த்­தக நிலை­யங்­கள் உடைப்பு!!

கிளி­நொச்­சி­யில் அண்­மைய நாள்­க­ளாக தொடர்ச்­சி­யாக வியா­பார நிலை­யங்­கள் உடைக்­கப்­பட்டு பொருள்­க­ளும் பண­மும் திரு­டப்­பட்டு வரு­கின்­ற­போ­தும்        பொலி­ஸா­ரால் இது­வரை எந்­த­வித முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­யும்            எடுக்­கப்­ப­ட­வில்லை என வியா­பா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

ஒரு குறிப்­பிட்ட காலப்­ப­கு­திக்­குள் கிளி­நொச்சி நக­ரின் ஏ-–9 முதன்மை வீதி மற்­றும் கன­க­பு­ரம் டிப்போ வீதி­யில் அமைந்­துள்ள இரு­ப­துக்கு மேற்­பட்ட வியா­பார      நிலை­யங்­கள் உடைக்­கப்­பட்­டுள்­ளன. இவற்­றில் இருந்து பண­மும் பெறு­ம­தி­யான பொருள்­க­ளும் திரு­ டப்­பட்­டுள்­ளன என வியா­பா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.

குறிப்­பாக தொலை­பேசி விற்­பனை நிலை­யங்­கள் உடைக்­கப்­பட்டு அலை­பேசி, மீள் நிரப்பு அட்­டை­கள் உள்­ளிட்ட பொருள்­கள் திருப்­பட்­டுள்ள நிலை­யில் அது       தொடர்­பில் கிளி­ நொச்­சிப் பொலிஸ் நிலை­யத்­தில் முறைப்­பாடு பதிவு செய்த போதும் பொலி­ஸா­ரால் எந்த வித முன்­னேற்­ற­க­ர­மான நட­வ­டிக்­கை­க­ளும்           மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இந்த நிலை­யில் தொடர்ச்­சி­யாக வியா­பார நிலை­யங்­கள் உடைக்­கப்­பட்டு            வரு­கின்­றன. கண்­கா­ணிப்பு கம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்ள வியா­பார          நிலை­யங்­க­ளில் மின்­சார இணைப்பு துண்­டிக்­கப்­பட்ட பின்­னர் திரு­டர்கள்            தங்­க­ளின் கைவ­ரிசை காட்­டு­கின்­ற­னர்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *