கண்டியில் உயிரிழந்தோருக்கு ரூபாய் 05 இலட்சம் நஷ்டஈடு

கண்டியில் உயிரிழந்தோருக்கு ரூபாய் 05 இலட்சம் நஷ்டஈடு

கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நடடஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

கண்டி திகன, கென்கல்ல, பள்ளேவெல, அகுரணை ஆகிய பிரதேசங்களுக்குச் இன்று நேரில் சென்று நிலமையை அவதானித்த தலைமை அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினார்.

மக்கள் சந்திப்பின் பின்னர் கண்டி மாவட்டச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போதே தலைமை அமைச்சர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
நட்டஈடு வழங்கும் நடவடிக்கையை நாளை ஆரம்பிக்குமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *