இன விருத்தியை கட்டுப்படுத்தும் மருந்து இருக்கவில்லை

இன விருத்தியை கட்டுப்படுத்தும் மருந்து இருக்கவில்லை

அம்­பாறை மாவட்­டத்­தில் கடந்த 27ஆம் திகதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக            இனக்­க­ல­வ­ரம் பர­வு­வ­ற்கு கார­ண­மாக இருந்த உண­வின் இர­சாய பகுப்­பாய்வு    முடி­வு­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. உண­வி­லி­ருந்து மீட்­கப்­பட்­டது மாக்­கட்­டியே     என்­றும், அதில் இன­வி­ருத்­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் எந்த மருந்­தும்                       கலக்­கப்­ப­ட­வில்லை என்று இர­சா­யன பகுப்­பாய்­வுக் திணைக்­க­ளம்                      தெரி­வித்­துள்­ளது.

அம்­பாறை நக­ரி­லுள்ள முஸ்­லிம் ஹோட்­ட­லில் சாப்­பி­டு­வ­தற்கு இரண்டு சிங்­கள இளை­ஞர்­கள் சென்­றுள்­ள­னர். முட்டை ரொட்­டி­யு­டன் தொட்­டுச் சாப்­பி­டு­வ­தற்கு குழம்பு கேட்­டுள்­ள­னர். இதன்­போது குழம்­பி­லி­ருந்து வெள்ளை நிறக் கட்டி        விழுந்­துள்­ளது.

இன­வி­ருத்­தி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் மருந்­து­தான் அந்த வெள்­ளைக் கட்டி என்று    சிங்­கள இளை­ஞர்­கள் வாதிட்­டுள்­ள­னர். குழம்பை இறுக வைப்­ப­தற்கு கோது­மைமா பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­க­வும், அதன் கட்­டி­தான் வீழ்ந்­தது என்­றும் முஸ்­லிம்    ஹோட்­டல் உரி­மை­யா­ளர் கூறி­ய­போ­தும் சிங்­கள இளை­ஞர்­கள் ஏற்­க­வில்லை.

வாய்த்­தர்க்­கம் ஏற்­பட்டு கைக­லப்­பாகி, இனக்­க­ல­வ­ர­மா­கி­யது.
இதற்­குக் கார­ண­மான உணவு நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய இர­சா­யன            பகுப்­பாய்­வுக்கு அனுப்­பப்­பட்­டது. அதன் முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

What do you think?

0 points
Upvote Downvote

Total votes: 0

Upvotes: 0

Upvotes percentage: 0.000000%

Downvotes: 0

Downvotes percentage: 0.000000%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *